Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச சைக்கிள் சேவை..?

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணிகளின் வசதிக்காக ‘இலவச சைக்கிள் சேவைத் திட்டம்’ தொடங்கப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் சேவையில், தொடர்ந்து பல சேவைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘இலவச சைக்கிள் சேவை’ தொடங்கப்பட உள்ளது. ரயில் நிலையங்களிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிலுள்ள பகுதிகளுக்கு, இந்த சைக்கிள் சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் இந்தச் சேவையைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சைக்கிள் சேவையைப் பயன்படுத்த விரும்பும் மக்கள், தங்கள் செல்போன் எண்ணை ரயில் நிலையங்களில் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பதிலாக வரும் பாஸ்வேர்டு எண்ணை, ரயில் நிலையத்தில் உள்ள சைக்கிள் நிலையத்தில் காண்பித்து, சைக்கிளை எடுத்துச்செல்லலாம். மீண்டும் அதே ரயில் நிலையத்திலேயே சைக்கிளை திரும்ப ஒப்படைக்கவேண்டிய அவசியமில்லை. அருகில் உள்ள எந்த ரயில் நிலையத்தில் வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம்.

இந்தச் சேவை, முதலில் கேரளா மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்த மெட்ரோ சேவையன்றே அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்திலும் இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement