திருமுருகன் காந்தி வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ்!

thirumurugan Gandhi

குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் தொடர்ந்த வழக்கில், தமிழக உள்துறை செயலாளர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 17 இயக்கம் சார்பில், சென்னை மெரினாவில் மே 21-ம் தேதி தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் நான்கு பேரும், குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, தங்கள்மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், நினைவேந்தல் கைதுக்குப் பிறகு, மேலும் 17 வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் மற்றும் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!