Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி வரியும் - இணையத்தில் உலவும் திருவள்ளுவரின் 552வது குறளும்! 

சமூக வலைதளங்களில் எல்லாவற்றுக்கும் மீம்ஸ் போடும் நெட்டிசன்கள் ஜிஎஸ்டி-க்கும் தங்கள் கைவரிசையைக் காட்டினர். கடந்த சில தினங்களாக ஜிஎஸ்டி பற்றி திருவள்ளுவரின் 552வது குறள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. 

`முப்பாலும் எழுதிய திருவள்ளுவர் ஜிஎஸ்டி பற்றி எழுதாமலா இருப்பார், இதோ...' என்ற பெயரில் பகிரப்படும் திருக்குறள் 

வரி, ஜிஎஸ்டி, திருக்குறள்


வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் 
கோலொடு நின்றான் இரவு. 

விளக்க உரை: 

நடு இரவில் கொள்ளைக்காரன் ஆயுதத்தைக் காட்டி மக்களிடம் பணம் பறிப்பது எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு கொடுமையானது ஆட்சியாளன் நள்ளிரவில் சட்டம் இயற்றி தன் குடிமக்களிடம் அதிக வரி கேட்பது. 

திருவள்ளுவரின் 552 வது குறளும்... விளக்க உரையும்! 

மு.வரதராசனார் : 

ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. 

கலைஞர் கருணாநிதி : 

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது 

சாலமன் பாப்பையா : 

தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக்கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். 

ஜிஎஸ்டி-ல் அதிக வரி, குறைந்த வரி, வரியில்லை என்ற விவாதத்தைத் தவிர்த்துவிடுவோம். ஆனால், ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் எழுதிவைத்த திருக்குறளில் இரண்டே வரியில், அரசன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும்; எவ்வாறு வரி விதிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது, இன்றும் ஏதோ ஒன்றுடன் பொருந்தியிருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement