திருமணமானவர்களுக்கான 2017- மிசஸ் இந்தியா அழகிப்போட்டி!

மிசஸ் இந்தியா பேஜண்ட்ஸ் அண்ட் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய திருமணமானவர்களுக்கான அழகிப் போட்டி, (மிசஸ். இந்தியா) 2017-ம் ஆண்டின் கிரான்ட் ஃபினாலே கடந்த 4-ம் தேதி சென்னை ஃபெதர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மண்டல மற்றும் மாநில அளவில் ஏற்கெனவே வெற்றி பெற்ற போட்டியாளர்கள் 'மிசஸ் இந்தியா கிரான்ட் ஃபினாலே'வில் பங்கேற்றனர். மிசஸ் இந்தியா நார்த், சவுத், வெஸ்ட், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளில் அழகிப் பட்டம் வென்றவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பிரபல ஃபேஷன் ட்ரைனர் 'லொவெல் பிரபு', நடன பயிற்சியாளர் 'வாணி மாதவ்', முடி நிபுணர் 'போனி சசிதரன்', செலிபிரிட்டி ஃபுட் கன்சல்டன்டின் நிபுணர் 'நீதா பூபாலன்', 'டாக்டர் மயில் வாகணன் துரை' மற்றும் 'கர்னல் ரேணுகா டேவிட்' ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

மிசஸ் இந்தியா

திருமணமானவர்களுக்கென்றே நடத்தப்படும் இந்த அழகிப் போட்டியில் அழகுக்கான முக்கியத்துவத்தைத் தவிர போட்டியாளர்களின் தன்னம்பிக்கை, அணுகுமுறை மற்றும் சமூக ஆர்வம் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதை எடுத்துக்காட்டும் வண்ணம் நடனப் பயிற்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த போட்டியில் பங்கேற்பாளர்களாக மேடையில் அரங்கேறினர். 

இந்தப் போட்டி மிசஸ் இந்தியா மற்றும் கிளாசிக் மிசஸ் இந்தியா என இருவேறு பிரிவுகளில் நடைபெற்றது. கிளாசிக் மிசஸ் இந்தியா அழகிப் பட்டத்தை 'கல்பனா தாகூர்' என்பவர் தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தில் மம்தா த்ரிவேதியும், மூன்றாவது இடத்தில் ரிங்கு பகத்தும் பட்டங்களை  வென்றனர். மேலும், 'மிசஸ் இந்தியா' பட்டத்தை 'த்ரிபாட்டி அரவிந்த்' வென்றார். இதன் இரண்டாவது இடத்தில், பிராச்சி அகர்வால் மற்றும் முன்றாவது இடத்தில் டாக்டர் டுயூ மீனா முடாங் ஆகியோர் பட்டங்களை வென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!