ஸ்டாலினை வம்பிழுக்கும் எஸ்.வி.சேகர்

நகைச்சுவை நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி சேகர்  தனது முகநூலில் தி.மு.க-வினரையும், மறைமுகமாக அதன் செயல் தலைவர் ஸ்டாலினையும் கிண்டலடித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பா.ஜ.க பிரமுகர் நாராயணனுக்கும், அம்பேத்கர் பெரியார் பேரவையைச் சேர்ந்த மதிமாறனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாராயணனுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்த எஸ்.வி.சேகர் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசியதாகத் தெரிவித்தார். பின்னர், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தம்மிடம் அவர் பேசியபோது சட்டமன்ற பணிகளில் இருந்ததாகவும், நட்பு வேறு கொள்கை வேறு என்று தெளிவுபடுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று எஸ்.வி சேகர் ஒரு முகநூல் நிலைத்தகவல் வெளியிட்டிருந்தார். அதில், 

எஸ்.வி.சேகர்
 

என்று தி.மு.க தற்போது ஈடுபட்டு வரும் தூர் வாரும் பணிகள் துவங்கி, சர்காரியா, 2ஜி எனத் தி.மு.க மீதான வழக்குகளையும் அதில் குறிப்பிட்டு நக்கலடித்துள்ளார். இதற்கு அவரது பதிவின் கீழேயே காட்டமாகப் பதில் சொல்லி வரும் தி.மு.க-வினர் #இந்துத்துவா என்கிற டேக்கை உருவாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர். இத்தனைக்கும் அவரது முகநூல் முகப்பிலேயே ஸ்டாலினுடன் பேசிக்கொண்டிருக்கும் படத்தை சேகர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!