Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எனக்கும், திவாகரனுக்கும் பிரச்னை இல்லை' - டி.டி.வி. தினகரன்

ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி.தினகரன் அணி என்று மூன்று அணிகளாக அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை, டி.டி.வி.தினகரன் சந்தித்தார்.  அவருடன் புகழேந்தி உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகளும் சசிகலாவைச் சந்தித்தனர். 

TTV Dinakaran


இதன் பிறகு டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'சில பயத்தால் ஜெயக்குமார் எனக்கு எதிராகப் பேசுகிறார். அவரது பயம் விரைவில் தெளிவாகும் என்று நினைக்கிறேன். நடராஜன் அ.தி.மு.க-வின் உறுப்பினர் இல்லை. உறவினர் என்ற முறையில்தான் சசிகலாவைச் சந்தித்தேன். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்பதால் நான் அவரைச் சந்திக்கவில்லை. சசிகலாவுடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. சமாதான பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு எனக்கும், திவாகரனுக்கும் பிரச்னை இல்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க அழுத்தம் கொடுக்கவில்லை. சசிகலாவின் ஒப்புதலுடன்தான் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தேன். அணிகள் இணைப்புக்காக நான் 60 நாள்கள் விலகி இருக்கிறேன். ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பிறகு நான் மீண்டும் கட்சிப் பணிகளை தொடங்குவேன். இருஅணிகளையும் நிச்சயம் இணைக்க முடியும். அணிகளை எவ்வாறு இணைப்பது என்பது குறித்து சசிகலா ஆலோசனை வழங்கியுள்ளார்', என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close