Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்தியப் பிரதேசத்தில் புது முயற்சியாக மரத்துக்கு அடமானக்கடன்

மத்தியபிரதேசம்

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்தியப்பிரதேச கிராமங்களில் மரத்துக்கு அடமானக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் வறட்சி அதிகளவில் நிலவியுள்ளது. இதனைத் தடுக்க கூட்டுறவு விவசாயிகளின் சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் இணைந்து கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில் வறட்சியைத் தடுக்கவும், விவசாயிகளின் விவசாயத்தைப் பெருக்கவும் கூட்டுறவுச் சங்கங்கள் மரத்தை அடமானமாகப் பெற்று கடன் தரும் புதிய நடைமுறையை உருவாக்கினர். ஒரு வகையில் விவசாயிகளுக்கு கடனும் வழங்கப்பட்டது. மறுபுறம் கிராமங்களில் மா, பலா போன்ற பலன் தரும் மரங்களும், வேம்பு, புளி, ஆலம் போன்ற மரங்களும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் இம்முயற்சி துவக்கப்பட இருக்கிறது. மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதன் மூலம் இயற்கையான மழைவளம் அதிகரிப்பதோடு, வறட்சியும் தடுக்கப்படுகிறது. வரும் ஆண்டும் தற்போதுள்ள எண்ணிக்கையைவிட கூடுதல் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இம்மாவட்ட கிராமங்கள் முடிவு எடுத்துள்ளன. ‘மத்தியப்பிரதேசத்தில் ஹர்தா மாவட்டம் விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement