Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விற்பனையாளர், விநியோகஸ்தர் பயனடைய ‘ஜிஎஸ்டி Mitr’ அமைப்பு தொடக்கம்!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், அணில் சேமியா குழுவினர் ‘ஜிஎஸ்டி Mitr’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். ‘ஜிஎஸ்டி Mitr’ என்ற செயல்முறை திட்டம் மூன்று கட்டங்களாக உள்ளது. இந்தச் செயல் முறையில் விற்பனையாளர்களும் விநியோகஸ்தர்களும் ஜிஎஸ்டி குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், வரி விதிப்பின் தாக்கம் குறித்து தெரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.  

ஜிஎஸ்டி


`ஜிஎஸ்டி Mitr’ குறித்து சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அணில் சேமியா நிர்வாக இயக்குநர் கமலஹாசன் பேசுகையில், “அணில் சேமியா தயாரிப்புகள் இந்தியா மற்றும் உலகெங்கும் பிரபலமான உயர்தர உணவு பொருள்கள் தயாரிக்கும் பிராண்டுகளில் ஒன்றாகும். சேமியா வகைகள் தயாரித்து விற்பனை செய்வதில் அணில் சேமியா முதலிடத்தில் உள்ளது. வறுத்த சேமியா, ராகி, ரவா வகைகள் அணில் குழுமத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி Mitr திட்டத்தின் மூலம் விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஜிஎஸ்டி குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், விற்பனையில் உள்ள கணக்கியல் மற்றும் வரி நடைமுறை குறித்த தெளிவான உள்கட்டமைப்பும் அமைத்துத் தர அணில் சேமியா குழுமம் முடிவெடுத்துள்ளது" என்றார். 

அணி சேமியா இயக்குநர் சுகுமார் கூறுகையில், "அணில் குழுமம் என்றைக்கும் விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் விற்பனையில் ஆதரவு அளித்து வந்துள்ளது. ‘ஜிஎஸ்டி Mitr’ திட்டம் தெளிவான விற்பனை நோக்குடன் செயல்பட உதவும். இத்திட்டத்தின் மூலம் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் பயன்பெற்று வாடிக்கையாளர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement