Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பராமரிப்புப் பணி காரணமாக 5 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தெற்கு ரயில்வே

ராமரிப்புப் பணி காரணமாகச் சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரக்கோணம் – காட்பாடி இடையே வாலாஜா ரோடு ரயில் நிலையப் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இன்றுமுதல் 11-ம் தேதிவரை (7-ம் தேதியைத் தவிர) மற்றதேதிகளில் (6, 8, 9, 10, 11) கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
# ஈரோடு – சென்னை வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (வ.எண்.22650), பழனி – சென்னை எக்ஸ்பிரஸ் (22652), கே.எஸ்.ஆர். பெங்களூரு – சென்னை வரும் மெயில் (12658), மேட்டுப்பாளையம் –சென்னை வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12672), மங்களூரு – சென்னை வரும் எக்ஸ்பிரஸ் (12602), ஆலப்புழா – சென்னை வரும் எக்ஸ்பிரஸ் (22640) ரயில்கள் 6 (இன்று), 10, 11 ஆகிய தேதிகளில் 20 நிமிடம் காலதாமதமாக வந்துசேரும்.
# மைசூரு – சென்னைக்கு வரும் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (22681) ரயில் இன்று (6-ம் தேதி) 20 நிமிடங்கள் காலதாமதமாக வந்துசேரும்.
# தான்பாத்  – ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 8 மற்றும் 9–ம் தேதிகளில் ஒரு மணி நேரம் 45 நிமிடமும், 10–ம் தேதி 15 நிமிடமும், 11–ம் தேதி 20 நிமிடமும் காலதாமதமாக ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்துசேரும்.
# டேராடூன் – மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12688) வருகிற 9–ம் தேதி ஒரு மணி நேரம் 15 நிமிடம் காலதாமதமாக ஜோலார்ப்பேட்டை வந்தடையும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close