இந்தியாவுக்கு இஸ்ரேல் கொடுக்கும் முக்கியத்துவம்... 'கண்கொத்தி' பாகிஸ்தான்!

ஸ்ரேல் நாட்டில் பிரதமர் மோடி, சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தலைநகர் டெல்அவிவில் தரையிறங்கிய மோடியை வரவேற்க மரபுகளை மீறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமானநிலையத்துக்கே வந்திருந்தார். இந்தியாவுக்கு ஆயுதங்கள் , தொழில்நுட்பங்களை வழங்குவதில் இஸ்ரேல் முதலிடத்தில் இருக்கும் நாடு. இதுவரை, இரு நாடுகளுக்கிடையேயான உறவு இலைமறைக் காயாகவே இருந்தது. இஸ்ரேல் நாடு உருவாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகே இந்தியப் பிரதமர் ஒருவர், அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

இந்தியா இஸ்ரேல் உறவு

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படும் ஜெருசலேம் நகரில் உள்ள 'கிங் தாவீத் ' ஹோட்டலில் பிரதமர் மோடி மற்றும் இந்திய விருந்தினர்களை இஸ்ரேல் தங்க வைத்திருக்கிறது. ராக்கெட்டுகளை ஏவினாலும் இந்த ஹோட்டலின் கண்ணாடியைக்கூட தகர்க்க முடியாது. மோடியின் பாதுகாப்பைக் கருதி ஹோட்டலில் உள்ள 100 அறைகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தங்கியுள்ள  'பிரெசிடென்ஷியல் சூட்' அறையின்  ஒரு நாள் வாடகை ரூ.1.06 கோடி. இதே ஹோட்டலில்தான் அமெரிக்க அதிபர்கள் பில் கிளின்டன், ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தங்கியுள்ளனர். 

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அளித்துள்ள முக்கியத்துவத்தைப் பாகிஸ்தான் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது. ''இஸ்ரேலுடன் இந்தியா நெருங்கி உறவாடுவது தெற்காசியப் பகுதியில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும். இந்தியா, இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. அதேவேளையில், இஸ்ரேலின் எதிரி நாடானா ஈரானுடனும் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது. பாகிஸ்தானும் தன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்தியா போல பல நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என நிபுணர்கள் பாகிஸ்தானை எச்சரித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!