Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேசினோவில் ரஜினி விளையாடும் புகைப்படம்: சுப்பிரமணியன் சுவாமி கடும் தாக்கு

அமெரிக்காவில், கேசினோவில் ரஜினிகாந்த் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று, நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. 

RAJINIKANTH IN CASINO


ரஜினிகாந்த், தற்போது 'காலா' படத்தில் நடித்துவருகிறார். படப்பிடிப்பின் நடுவில், அவர் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு, அவர் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், அவர் கேசினோவில் விளையாடும் புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வெளியாகி, வைரலாகிவருகிறது. 
இந்நிலையில் இன்று, பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், அந்தப் புகைப்படத்தைப் பதிவுசெய்து, "தனது உடல்நலத்தை அமெரிக்க கேசினோவில் மேம்படுத்தும் ரஜினிகாந்த்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அவரது சொத்துகள் எங்கிருந்து வந்தது என்று அமலாக்கத்துறை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் அரசியில் பிரவேசம்குறித்து கடுமையான விமர்சனங்களை சுப்பிரமணியன் சுவாமி வைத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close