Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகக் காவல்துறைக்கு அதிர்ச்சியளித்த புள்ளிவிவரம்!

'தென்னிந்திய  காவல்துறைகளிலேயே தமிழகக் காவல்துறைக்குத்தான் மிகக் குறைந்த சம்பளம்' என சமீபத்திய ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகக் காவல்துறை

காவல்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், சமீபத்தில் தென்னிந்திய காவல்துறையினர் குறித்து ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அதில், காவல்துறையினரின் ஊதியம்குறித்தும் ஓர் ஆய்வுசெய்தனர்.  அதன் முடிவுகள்தான் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக தமிழகக் காவல்துறைக்கு.

'தென்னிந்திய காவல்துறைகளிலேயே தமிழகப் போலீஸாருக்குத்தான் குறைந்த சம்பளம்' என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதல் இடத்தில் கேரளா மாநிலமும், அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களும் உள்ளன. தமிழ்நாடுதான் கடைசி இடத்தில் உள்ளது.

தமிழகக் காவல்துறையினரின் குடும்பங்கள் ஊதிய உயர்வு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி தமிழகக் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close