Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துணை ஜனாதிபதித் தேர்தல்: நான்கில் மூன்று மனுக்கள் நிராகரிப்பு!

துணை ஜனாதிபதித் தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்க உள்ள நிலையில், இதுவரை வந்துள்ள நான்கு மனுக்களில் மூன்று மனுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

தேர்தல்

செவ்வாய் அன்று துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான மனுத்தாக்கல் தொடங்கியது. இதுவரை நான்கு பேர் மனுத்தாக்கள் செய்துள்ளனர். ஆந்திராவிலிருந்து பி.வி.எஸ்.விஜி குமார், கான்பூரிலிருந்து விஜய் நாராயண், உத்தரப்பிரதேசத்தில் தேஜ் பஹதுர் சிங், சரஸ்வதி ஷர்மா ஆகிய இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவற்றில், கான்பூரிலிருந்து மனுத்தாக்கல் செய்துள்ள விஜய் நாராயண் என்பவரின் மனுவைத் தவிர, மூன்று மனுக்களும் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

மனுத்தாக்கல் செய்ய கடைசித் தேதி, ஜுலை18. ஜூலை 19-ம் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வுசெய்யப்படும். வாபஸ் பெறுவதற்கான கடைசித் தேதி ஜூலை 21. ஆகஸ்ட் 5-ல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அறிவித்துவிட்ட நிலையில், இன்னும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close