துரைமுருகனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய டிஜிபி! | DGP T.K.Rajendran fulfilled Durai murugan's wish

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (06/07/2017)

கடைசி தொடர்பு:14:00 (06/07/2017)

துரைமுருகனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய டிஜிபி!

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், 'டிஜிபி இருந்தால்தான் பேசுவேன்' என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வைத்த கோரிக்கையை, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உடனடியாக ஏற்று சட்டப்பேரவைக்கு வந்தார்.

தமிழக சட்டப்பேரவை, கடந்த மே மாதம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில், எதிர்க்கட்சியினர் பங்கேற்றுக் கேள்விகள் எழுப்பிவருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்துவருகின்றனர். மேலும், வெளிநடப்பும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, 'இந்த விவாதத்தில் நான் பேச வேண்டுமானால், டிஜிபி ராஜேந்திரன் சட்டப்பேரவைக்கு வர வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவைக்கு வருமாறு டிஜிபி-க்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சட்டப்பேரவைக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உடனடியாக வந்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன், போலீஸாருக்குக் கவுன்சலிங் கொடுக்க வேண்டும், ராமஜெயம் கொலை வழக்கு, டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கு உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.