Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக டி.ஜி.பி-க்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு!

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கதிரேசன்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், "தமிழக டி.ஜி.பி கூடுதலாக 2 ஆண்டுகள் பதவி நீட்டித்து கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக  ஊடகங்களில் செய்தி வெளியாகியது. குட்கா நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு லஞ்ச விற்பனையை அனுமதித்ததாக வருமானவரித் துறையினர் அளித்த தகவலின் பேரில், டி.ஜி.பி ராஜேந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுடைய நபர் ஒருவரை டி.ஜி.பி-யாகப் பணி புரிவதற்கான காலத்தை நீட்டித்தால் அது தவறான உதாரணமாகிவிடும். எனவே, குட்கா நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு லஞ்ச விற்பனையை அனுமதித்தது தொடர்பான டி.ஜி.பி ராஜேந்திரன் மீதான விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றியும், சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், ராஜேந்திரனை டி.ஜி.பி-யாகப் பணியாற்ற பணி நீட்டிப்பு செய்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு,  இன்று நீதிபதி சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில் டி.ஜி.பி, டி.கே.ராஜேந்திரன் அவரது பதவி நீட்டிப்பு நியமனம் தொடர்பாக ஆவணங்கள் மற்றும் குட்கா விவகாரங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் புகார் குறித்த ஆவணங்களையும் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசு தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், வருமானவரித் துறை இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளித்து 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்தே இவ்வழக்கு உகந்ததா எனக் கருதப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு .

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close