வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (06/07/2017)

கடைசி தொடர்பு:19:08 (06/07/2017)

'மெர்சல்' படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்!

இது, எதைப் பற்றிய படம், படத்தின் கதையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை ஒரு ஃபர்ஸ்ட் லுக் போட்டோவிலும், பட டைட்டில் ஃபான்டிலும் சொல்வதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஃபேஷன். அப்படித்தான் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் கதையையும்  டிசைனிலேயே சொல்லி தெறிக்கவிட்டு இருக்கிறார் இயக்குநர் அட்லி. 

மெர்சல்

இந்தப் படத்தில் விஜய்க்கு மூன்று கேரக்டர்கள். அப்பா மற்றும் இரண்டு மகன்கள் எனச் சொல்கிறார்கள். அதில் ஒரு கேரக்டர் பெயர் 'மாறன்'. மாறன் ஒரு டாக்டர் கேரக்டராம். அந்த கேரக்டருக்கு 'மருத்துவர் திலகம்' என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார்களாம்.  'மெர்சல்' படம் வர்ற தீபாவளிக்கு ரிலீஸ். இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.