வெளியானது ஜூனியர் என்.டி.ஆர் பட டீசர்!

'பவர்', 'சர்தார் கப்பர் சிங்' ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவீந்திரா. அவர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 'ஜெய் லவ குசா' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெய், லவ குமார் மற்றும் குசா ஆகிய ரோல்களில் நடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

jai lava kusa

இந்தப் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. "அந்த ராவணன கொல்றதுக்கு கடல் தாண்டிப் போகணும். இந்த ராவணனைக் கொல்ல கடல் அளவு தைரியம் இருக்கணும்" என ஜூனியர் என்.டி.ஆர் பன்ச் டயலாக் பேசும்படி மாஸாக இருக்கிறது டீசர். இந்தப் படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர், நந்தமுரி கல்யாண்ராம் என்.டி.ஆர் என்ற பேனரில் தயாரித்திருக்கிறார். நிவேதா தாமஸ், ராஷி கண்ணா ஆகியோர் இதில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சோட்டா கே.நாயுடு இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பனியாற்றுகிறார்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!