வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (06/07/2017)

கடைசி தொடர்பு:21:32 (06/07/2017)

ஃப்ளிப்கார்ட் - ஸ்நாப்டீல் இணைப்பு: தொடரும் இழுபறி!

இந்தியாவின் மிகப் பெரும் ஆன்லைன் நிறுவனமான ஸ்நாப் டீல் நிறுவனத்தை, இன்னொரு பெரிய நிறுவனமான ஃப்ளிப்கார்ட்  நிறுவனம் வாங்கும் முயற்சியில் இழுபறி நீடித்து வருகிறது. 

snapdeal flipkart

ஸ்நாப் டீல் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5 பில்லியனுக்கு மேல் என சொல்லப்பட்டாலும், தற்போது அதன் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்  (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6,500 கோடி) என கருதப்படுகிறது. எனவே, ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 700- 800 மில்லியன் டாலர் வரை தரத் தயார் என்று சொன்னது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். 

ஃப்ளிப்கார்டின் இந்த ஆஃபரை ஸ்நாப்டீல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. முக்கியமாக, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முக்கிய நிறுவனமான சாஃப்ட்பேங்க் நிறுவனம் 'இது மிகவும் குறைவான தொகை' என்று சொல்லி ஏற்க மறுத்திருக்கிறது. 

இந்த பேரத்தினால் இரு நிறுவனங்களும் இணையும் முயற்சியில் இழுபறி நீடித்து வருகிறது. என்றாலும், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால், அடுத்து வரும் நாள்களில் புதிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்!