Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.டி.வி தினகரன் அணிக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு!

டி.டி.வி. தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ளார். 

TTV Dinakaran

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி என்று பிரிந்திருந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அணி உருவாகியது. எம்எல்ஏ-க்கள் செந்தில் பாலாஜி, ராஜன் செல்லப்பா, பழனியப்பன், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 34 எம்எல்ஏ.க்கள் ஏற்கெனவே டி.டி.வி. தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், மேலும், ஒரு எம்எல்ஏ தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி,  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு, தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, டி.டி.வி. தினகரனை, இயக்குநர் பாரதிராஜாவும் சந்தித்துள்ளார்.


அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இது நட்பு ரீதியிலான சந்திப்புதான் என்று கூறப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement