சென்னையில் மீண்டும் மழை... மக்கள் மகிழ்ச்சி..!

சென்னையில் இன்று கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவியது. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதுமே வெயில் வாட்டிவதைத்தது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததையடுத்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.  அக்னி நட்சத்திர வெயிலையடுத்து அவ்வப்போது சென்னையின் சில பகுதிகளில் மழையும் பெய்துவருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக நந்தனம், தி.நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

இரு வார காலமாக மழை இல்லாத நிலையில், இன்று பல்லாவரம், மீனப்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் கனமான மழை பெய்தது. அதனால், குளிச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், கடுமையான மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சென்னையில், பெரும்பாலான பகுதிகளில் சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கும்நிலை உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!