Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது - கோவையில் பரபரப்பு

கோவை மாவட்டம் சூலூரில், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வட மாநில இளைஞர்கள் இருவர், நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வந்த இரண்டு வடமாநில இளைஞர்கள், சிங்காநல்லூர் அருகில் அமைந்திருக்கும் தனியார் தொழிற்சாலையில், கடந்த சில மாதங்களாக பணியாற்றிவந்துள்ளனர். சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த அந்த இளைஞர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்த இராணுவப் புலனாய்வுத் துறையினர், நேற்று அவர்கள் இருவரும் சூலூரை அடுத்துள்ள பாப்பம்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

விசாரணையில், கைதுசெய்யப்பட்ட இரு வட மாநில இளைஞர்களும், அசாம் உள்ளிட்ட வடமாநிலப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்கும் பிரிவினைவாதக் குழுவான, 'போடோ' தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பிடிபட்டவர்களைப் பற்றிய மேலதிக விவரங்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்புடைய வேறு சிலரும் கோவை சுற்றுவட்டாரத்தில் இருக்கிறார்களா...  தமிழகத்தில் ஏதேனும் தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தீட்டியிருக்கிறார்களா... போன்ற கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். இரண்டு நபர்களும் தங்கியிருந்த சூலூர் பகுதியில், மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் ஃபோர்ஸ் தளம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாகவே கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு வட மாநில கூலித் தொழிலாளர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கிறது. குறிப்பாக, அசாம், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளே அதிக அளவில் கோவை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். கோவை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும்10 ஆயிரத்துக்கும் அதிகமான  வடமாநில இளைஞர்கள் வேலை நிமித்தமாக தற்போது வசிக்கிறார்கள்.


கோவை மற்றும் திருப்பூரிலுள்ள தனியார் நிறுவனங்களில், சுமை தூக்கும் வேலைகளுக்கும், கட்டட வேலைகளுக்கும் அதிக அளவில் வட மாநிலத் தொழிலாளிகளே பணியமர்த்தப்பட்டுவருகின்றனர். கடந்த ஆண்டு, திருப்பூர் மாவட்டம் சுண்டமேடு என்னும் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்த வட மாநில இளைஞர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, மேற்கு வங்க காவல்துறை கைதுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close