Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் ஆதரவாளரின் சகோதரர்களுக்குச் சம்மன்!

சென்னை மண்ணடியில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் ஹாரூனின் சகோதரர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Summon sent to brothers of I.S supporter

சென்னையில், கடந்த 4-ம் தேதி ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் ஹாரூன் கைதுசெய்யப்பட்டார். இவர், சென்னையில் ஐஎஸ் இயக்கத்துக்கு நிதி திரட்டி வந்துள்ளார். மேலும், இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையையும் செய்துவந்ததாகக் கூறி, ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் ஹாரூனைக் கைதுசெய்து, டெல்லிக்குக் கொண்டுசென்றனர். இவர், சென்னையில் செல்போன் கடை நடத்திக்கொண்டு, துபாய் வரை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹாரூனின் சகோதரர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரது சகோதரர்கள் ராஜா முகமது மற்றும் சிக்கந்தருக்கு ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராக சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் ஆதரவாளர் முகமது இக்பாலுடன் ஹாரூன் தொடர்பில் இருந்ததாக, ராஜஸ்தான் காவல்துறையினர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement