Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.ஜி.பி நியமனம்... சட்டசபையில் அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின்!

டி.ஜி.பி  டி.கே.ராஜேந்திரனுக்கு பதவிக்காலம் முடிய இருந்த நிலையில், அவருக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்துள்ளது தமிழக அரசு. இந்த விவகாரம் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தமிழக அரசை ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Stalin

 

இந்நிலையில், சட்டசபையில் இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் பேசுகையில், "மூத்த அதிகாரிகள் இருக்கும்போது ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு செய்தது ஏன்? குறிப்பாக, டி.கே.ராஜேந்திரனுக்கு இணையாக இரண்டு அதிகாரிகள் இருக்கும்போது ஏன் அவரைப் பதவி நீட்டிப்பு செய்தீர்கள்? குட்கா விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, டி.ஜே.ராஜேந்திரனை எப்படி மீண்டும் நியமனம் செய்யலாம்? லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் உள்ள ஒருவர் எப்படி டி.ஜி.பி-யாக முடியும்?


தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? அதேபோல் மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்காதது ஏன்? தென் மாநிலங்களில், அதிக அளவு குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது" என்றார்.

Edappadi Palanisamy


இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "டி.ஜி.பி பணி நீட்டிப்பு முறைப்படியே நடந்துள்ளது. மத்திய அரசு அனுப்பிய ஐந்து பேர் பட்டியலில் இருந்த ஒருவரைத்தான், டி.ஜி.பி-யாக தேர்ந்தெடுத்துள்ளோம். யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் வருமானவரித் துறையின் விசாரணையில் உள்ளது. பணம் பெற்றதாக அரசியல் விரோதம் காரணமாக, ஒருவர் காகிதத்தில் எழுதுவதையெல்லாம் ஆவணமாகக் கருத முடியாது.


நவம்பரில் மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் செய்ததும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close