Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பா.ஜ.க-வின் பெயரைக் கெடுக்க முயற்சி...' முரளிதர ராவ் குற்றச்சாட்டு!

மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி மக்களிடையே பா.ஜ.க-வுக்கு ஆதரவு திரட்டவும், மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்துகொள்ளவும் அக்கட்சியின்  மூத்த தலைவர்கள் கிளம்பியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Muralidhar Rao


அப்போது அவர், "நான் 15 நாள்கள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன், பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடையே பரப்புவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். இதுவரை நான் மக்களை சந்தித்ததில், மக்களிடையே பா.ஜ.க அரசின் திட்டங்கள் நல்ல முறையில் வரவேற்பு பெற்றிருப்பது தெரிகிறது.


தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் வெற்றிப் பாதையில் தொடருகின்றன. வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் பா.ஜ.க-வில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் தற்போது இருக்கும் நிலையை விட, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல நிலைக்கு தமிழகத்தை எடுத்துச் செல்வோம். தமிழகத்தில் பா.ஐ. க-வின் பெயரை கெடுக்க முயற்சிகள் நடக்கின்றன. மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக கோஷமிடும் தி.மு.க பள்ளிகளில் சத்துணவில் பால் கொடுக்கச் சொல்லி போராடலாமே.? ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு போராடாமல், இப்படி செய்வது வீண்.

Muralidhar Rao


ஜிஎஸ்டி வரியில், அத்தியாவசியப் பொருள்கள் சிலவற்றின் வரிகள் அதிகமாக உள்ளதாக குறை சொல்லப்படுகிறது. உண்மையில் மத்திய அரசு GST கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தயாராக உள்ளது. மக்களின் கருத்துகளைக் கேட்டு வரும் காலங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பபடலாம். ஜனாதிபதி தேர்தலில் தமிழக அரசு பா.ஜ.க-வுக்கு முழு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. ராம்நாத் கோவிந்த் நிச்சயமாக 70% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று கூறினார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close