Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு ஆட்சி நடத்துகிறது..! மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநில ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கினை பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் பா.ஜ.க உறுப்பினர்களை நியமண சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிப்பதில்லை. மாறாக மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது கூட்டாச்சித் தத்துவத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது. பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பா.ஜ.க உறுப்பினர்கள் மூன்று பேரை நியமண சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது.

அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தது, மத்திய அரசுக்கு ஆளுநர் ஏஜென்டாக செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல டெல்லியிலும், மேற்கு வங்கத்திலும் மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். இத்தகைய செயலை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close