சபரிமலை சுவாமி அய்யப்பனுக்கு பம்பை ஆற்றில் ஆராட்டு நடந்தது...!


சபரிமலை சுவாமி அய்யப்பனுக்கு பம்பை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது.

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோயிலில் முக்கிய விழாவான ஆராட்டுத் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இந்த ஆண்டு புதிய தங்க கொடிமரம் நடப்பட்டது. அதில் கொடி ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக திருவிழா  நடைபெற்றது. 9-ம் திருவிழாவான வியாழக்கிழமை இரவு சபரிமலையில் பள்ளிவேட்டை நடைப்பெற்றது. இதையொட்டி சுவாமி அய்யப்பன் யானை மீது எழுந்தருளினார்.

அதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். திருவிழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு ஹோமம், நெய் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் 18-ம்  படி வழியாக சுவாமி அய்யப்பன் எழுந்தருளி ஆராட்டு நடைபெறும் பம்பை ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் சுவாமி அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பி சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தனர். அதன்பின் 12 மணிக்கு பம்பை கணபதி கோயிலில் சுவாமி அய்யப்பன் எழுந்தருளல் நடந்தது. மாலையில் கணபதி கோயிலில் இருந்து பவனியாக சுவாமி அய்யப்பன் சன்னிதானத்துக்கு எடுத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 10 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!