Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்- கரூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்

      மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் சம வாய்ப்பும், சம மதிப்பும் வழங்க முன் வரவேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.          


கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு அளிப்பது குறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் சாந்திவனம் தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 


 அதில் கலந்து கொண்டு பேசிய அவர், 'உடலாலும், உள்ளத்தாலும் வளம் குன்றி இருந்தாலும், அவர்களிடம் உள்ள உள்ளார்ந்த மாற்றுத் திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும். பொருளாதார மற்றும் தனி நபர் மேம்பாட்டிற்காக அரசு தேசிய அடையாள அட்டை வழங்குதல், உதவித்தொகை வழங்குதல், காப்பகத்தில் பாதுகாத்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல் என பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி மாற்றுத் திறனாளிகளின் நலன் காத்து வருகிறது.

சமுதாயத்தில் நாம் ஒவ்வொருவரும் மாற்றுத் திறனாளிகளை சமமாக மதித்து, சம வாய்ப்புகள் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பளித்தும், சக மனிதர்களைப் போல் சமமாக அன்பு காட்டி அரவணைத்தும், உளப்பூர்வமாக உணர்வளிக்க வேண்டும்' என்றார்.


 இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், சாந்திவனம் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் ஜானகிராமன், இயக்குநர் எம்.அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close