Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சர் உறுதியால் போராட்டம் வாபஸ்: தீப்பெட்டி விலை உயருகிறது!

தீப்பெட்டித் தொழிலுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வலியுறுத்தி, கடந்த 6 நாள்களாக நடத்திவந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. வரும் ஜூலை 10-ம் தேதி திங்கட்கிழமை முதல், தீப்பெட்டி உற்பத்தி தொடங்குகிறது.

இந்திய அளவில், மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் 85 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் நடந்துவருகிறது. இதில், 300-க்கும் மேற்பட்ட பகுதிநேர மற்றும் 20-க்கும் மேற்பட்ட முழுநேர இயந்திர தீப்பெட்டி உற்பத்தி கம்பெனிகள் இயங்கிவருகின்றன. தீப்பெட்டித் தொழிலை நம்பி, தமிழகம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்

தற்போது, கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமும், பகுதி மற்றும் முழுநேர இயந்திரத் தயாரிப்பு இரண்டுக்கும் 18 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பகுதி நேரத்தில், ஒரு இயந்திரத்துக்கு 250 தொழிலாளர்களுக்கு மேல் தேவைப்படுவார்கள். ஆனால், முழுநேர இயந்திரத் தயாரிப்புக்கு 50 பேர் போதும். அதனால், பகுதி மற்றும் இயந்திர வரிவிதிப்பில் வரி வித்தியாசம் இருக்க வேண்டும், வரியின் அளவையும் குறைக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததோடு, தினமும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூ ராஜூவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். முதல்வரிடம் தெரிவித்து வரிவிதிப்பு குறைப்புக்கு மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக அமைச்சர் உறுதியளித்தன் அடிப்படையிலும், தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, வரும் 10-ம் தேதி முதல் தீப்பெட்டி உற்பத்தியைத் தொடங்குவது எனவும், அன்று முதல் தீப்பெட்டிப் பண்டல்களின் விலையை 10 சதவிகிதம் அதிகரிக்கவும், சங்க அவசரக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடிக்கு வருகை தரும் ஜிஎஸ்டி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடமும் தங்கள் கோரிக்கை மனுவை அளிக்க இருப்பதாகவும், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், தீப்பெட்டித் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement