Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிதறிக்கிடக்கும் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர்கள்! அச்சத்தில் மணப்பாறை மக்கள்

திருச்சி மாவட்டம், மணப்பறை பகுதிகளில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள்  கண்டுபிடிக்கப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

கடந்த 29-ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில் இருந்த மாதா டிரேடர்ஸ் எனும் பழைய இரும்புக்கடையில், எடைக்குப் போடப்பட்ட ராக்கெட் லாஞ்சரின் அடிப்பாகம் வெடித்தது. அந்த விபத்தில், மாரியப்பன் என்பவர் பலியானார். அடுத்து, மூன்று பேர் படுகாயம் அடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நடந்த சோதனையில், ஒரு பழைய இரும்புக் கடையில் 25 ராணுவ குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில், வீரமலை அடிவாரத்தில் அடிக்கடி இந்திய ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். இதற்காக அங்கு ராணுவ வீரர்கள் முகாமிட்டு, பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். வனத்துறைக்குச் சொந்தமான வீரமலை அடிவாரத்தில் பதுங்கு குழிகள் உள்ளன. பயிற்சிகளின்போது, பலவகையான துப்பாக்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர் எனப் பல வகையான குண்டுகள் பயன்படுத்தப்படும். அங்கு, குண்டுகள் வெடித்துச் சிதறும். சில குண்டுகள் அப்படியே கிடப்பதும் வழக்கம். ராணுவ வீரர்கள் பயிற்சி முடித்துச் சென்றதும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர், வெடித்த குண்டுகளின் பாகங்களை எடுத்துச் சென்று, பழைய இரும்புக் கடையில் போட்டு, பணம் வாங்கிக்கொள்வது வழக்கம்.

இப்போது, வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களையும்  எடுத்துச்சென்று பழைய இரும்புக் கடையில் போடுகின்றனர். அவற்றை வாங்கும் பழைய இரும்புக் கடை உரிமையாளர்கள் அல்லது தொழிலாளர்கள், அந்தக் குண்டுகளை உடைக்க முயற்சிக்கும் போது வெடித்துச் சிதறி, உயிரிழந்த சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்கதையாகவே உள்ளன.

இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் இடத்தில் உள்ள மலையடிவாரத்தில், பல்வேறு வகையான குண்டுகள் வெடிக்காமல் அப்படியே கிடக்கின்றன. அங்கு சிறிய தோட்டாக்கள் முதல் ராக்கெட் லாஞ்சர்கள் வரை கிடப்பதால், அவை திடீரென வெடித்துவிடுமோ என்றும் அந்தப் பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். வெடிக்காத குண்டுகளை  வீட்டுக்கு எடுத்துச் சென்றால், அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்பதால், அதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement