Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தை மையாகக்கொண்டு செயல்படுகிறது ஐஎஸ் அமைப்பு! பொன்.ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள், தமிழகத்தை மையமாகக்கொண்டு செயல்படுகிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இலங்கை அரசுக்கு, பிரதமர் மோடி நமது நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். மீனவர்கள் பிரச்னையை வேறுவிதமாகக் கையாண்டால், அது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் இருக்கும். இலங்கை அரசு கடுமையான தண்டனையாக அபராதம் விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம், தண்டனை என சட்டம் கொண்டு வந்த நிலையில்,  இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால், அதற்குரிய அபராதத்தை இலங்கை அரசு கட்டத் தயாராக இருகிறதா. உடனடியாக இலங்கையிலிருந்து 50 படகுகளையும் 140 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். அதற்கான  நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கதிராமங்கலத்தில் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமிழக அரசுதான் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள், தமிழகத்தை மையமாகக்கொண்டு செயல்படுகின்றன. தமிழக உளவுத்துறை, அதிதீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இதை மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது.

தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் கொலை, கொள்ளை சகஜம்தான் என முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி நடவடிக்கை எடுத்துவருகிறார். இதன்மூலம், விவசாயிகளின் தற்கொலை குறையும். பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தக்கூடாது. அரசாங்கம் மக்களை போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்குத் தள்ளக்கூடாது. புதுசேரியில், ஆளுநர் மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்துவருகிறார். தேவையற்ற போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகிறார்கள். எல்கை மாற்றி டாஸ்மாக் கடை திறப்பது ஏற்புடையது அல்ல. அரசு இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரண மக்கள் வீடு கட்டத் தேவையான மணலை அரசு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி இல்லை என்று கோர்ட்டில் தமிழக அரசு கூறியிருக்கிறது. அது உண்மை இல்லை. குளங்களைத் தூர்வார அனுமதி அளித்திருப்பதால், குளங்களில் தண்ணீர் இல்லை. 82 ஆண்டுகளாக தூர் வாரப்படாத  மேட்டூர் அணைகூட, மத்திய அரசின் உதவியோடு தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close