Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.!': மதுரையில்  திருமா பேச்சு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'பெண்கள் போராட்டம் நடத்துவது ஃபேஷனாகிப் போச்சு' என்று கூறியதற்கு. சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராகப் பல கருத்துகள் எழுந்தன. அவரை நெட்டிசன்கள் கலாய்த்துவந்தனர் . இந்நிலையில் இன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .

Thriumavalavan

மதுரை வடபழஞ்சி பகுதியில், முத்தமிழன் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்தும், மதுரை சின்ன உடைப்பில்  அம்பேத்கர் , இம்மானுவேல் சேகரன் சிலையைத் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், திருமாவளவன் பேசியதாவது...

''மதுரை வடபழஞ்சி பகுதியில், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய வி.சி. கட்சி நிர்வாகி முத்தமிழனை சாதி வெறியர்கள் 10 பேர் சேர்ந்த கும்பல் மறைமுகமாகப் படுகொலை செய்தது . அதற்காக, மூன்று  நபர்களை மட்டும் போலீஸ் கைதுசெய்துள்ளது. ஆனால், அவர்களை ஏவிவிட்ட  துரோகிகளை போலீஸ் இன்றுவரை கைதுசெய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது . அந்தப் பகுதியில், அரசு டாஸ்மக் கடைகளை அகற்றியது முத்தமிழனுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. முத்தமிழன் நினைத்திருந்தால், சாராயக்கடை கும்பலிடம் பணம் பெற்றிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தன் உயிரைக் குடுத்தேனும் அந்தப் பகுதியில் அமைந்திருந்த டாஸ்மாக் கடையை அகற்றி, பல குடும்பங்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் . மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய போலீஸ் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. திருமங்கலம் மருதக்குடியில், இரட்டைக் குவலை முறை இன்னும் வேரூன்றிக்கிடக்கிறது என்பது மானக்கேடான விசயம். தென் மாவட்டப் பகுதியில் மட்டும் இன்னும் 200-க்கும் மேற்பட்ட தேனீர்க் கடைகளில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் இரட்டைக் குவலையை பயன்படுத்திவருகின்றனர்.

Thirumavalavan

தற்போது, ஆட்சியில் முதல்வர் இருக்கிறாரா? இல்லையா? என்பதுக்கூட தெரியவில்லை , அவரது அரசும் அப்படித்தான். ஆட்சியும் அப்படித்தான். சாதி வெறித் தாக்குதல் தற்போது நடக்கவில்லை ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலிருந்து நடந்துவருகிறது . ஜெயலலிதா இருந்த போதுதான் தருமபுரியில் தலித் வீடுகள் சூரையாடப்பட்டு தீக்கரையானது . பரமக்குடியில் ஏழு பேரின் ரத்தம் மண்ணில் சிந்தி உயிர் நீத்தது . மதுரையில், இப்படிப் பல வன்கொடுமைகள் அரங்கேறுகின்றன . ஆனால், அதை போலீஸ் கைகட்டியே பார்க்கிறது . மதுரை ஆலம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி ஏற்றியதற்கு, வீடுகளுக்கு தீவைக்கப்பட்டும் , வாகனங்கள் எரிக்கப்பட்டும் பல கொடுமைகள் நடத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கொடி ஒன்றும் பாக்கிஸ்தான் கொடி அல்ல.

தலித் மக்களை இப்படி பிரித்துப் பார்க்கிறீர்கள். அவர்களுக்கும் ஓட்டுரிமை இருக்கிறது. அவர்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள்தான். வன் கொடுமைச் சட்டம், இரண்டு வருடங்களுக்கு முன்பே கொண்டுவரப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அதை செயல்படுத்தாமல் மெத்தனப்போக்காக இருக்கிறது . மோடி அசைக்கும் கண் அசைவிற்கும் , கை அசைவிற்கும் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது . டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய முத்தமிழன் குடும்பத்துக்கு, தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள் ,மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close