வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (08/07/2017)

கடைசி தொடர்பு:17:45 (08/07/2017)

ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

ஜெயலலிதாவின் சமாதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று காவல்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. ஜெயலலிதா இருந்த வரை காவல்துறையின் மானிய கோரிக்கைகள்குறித்து பதிலளித்து வந்தார். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் அவர் மறைந்துவிட்டதால், முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

இதனிடையே இன்று, சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு மலர் தூவி அஞ்சலிசெலுத்தினார். காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களை முடித்துக்கொண்டு, அவர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். அவரோடு, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் சமாதியில் மரியாதைசெலுத்தினார்கள்.