Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”ஊழல், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடுங்களேன்” – பந்த்திற்கு கிரண்பேடி பதிலடி!

”புதுச்சேரி மாநிலம் தற்போது கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றது. பணி முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு 150 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருக்கின்றது. இது போன்ற நிலையில் இப்படி ஒரு பந்த் நடத்தலாமா ?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கிரண் பேடி.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரையில்லாமல் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளித் தாளாளர் செல்வகனபதி ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சகம் எம்எல்ஏ-க்களாக நியமித்தது. அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே அவர்களுக்கு ராஜ்நிவாசில் ரகசியமாகப் பதவிப் பிரமாணத்தை செய்து வைத்தார் கிரண்பேடி. இந்த விவகாரம்தான் தற்போது அவருக்கு எதிரான போராட்டமாக வெடித்திருக்கின்றது. ஆளும் கட்சியின் ஆதரவுடன் தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகள் இன்று நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தால் முழுவதுமாக முடங்கியது புதுச்சேரி.

 

இந்நிலையில் வாராந்திர கள ஆய்வின்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த கிரண்பேடி, ”எனக்கு எதிராக பந்த் போராட்டம் நடப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. முதல் முறையாக எனது சேவைக்கு எதிராக பந்த் நடக்கின்றது. இதனால் புதுச்சேரியின் வருவாயும் வளர்ச்சியும்தான் பாதிக்கப்படும். ஊழல் முறைகேடு, சுகாதாரச் சீர்கேடு மற்றும் அரசு ஊழியர்கள் மக்களுக்கானப் பணியைச் செய்யாதிருத்தல் போன்றவைகளுக்காக பந்த் நடத்தலாம். மாநிலம் தற்போது கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றது. பணி முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு 150 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருக்கின்றது. இது போன்ற நிலையில் இப்படி ஒரு பந்த் நடத்தலாமா ?

நிலுவையில் இருக்கும் தொகையைத் தராமல் ஒப்பந்தக்காரர்கள் எப்படி ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்கு வருவார்கள்? செயல்படும் அரசானது தனது மக்களுக்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத்தான் பாடுபடும். ஆனால் ஒருவர் மக்களுக்கு சேவை செய்கிறார் என்பதற்காக இங்கு பந்த் நடத்துகிறார்கள். மதுக்கடைகளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துங்கள். அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு எதிராகப் போராடுங்கள். புதுச்சேரியின் நலனுக்காக சேவை புரிபவர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் வேண்டாம். 11 மாதங்கள் மட்டுமே புதுச்சேரியில் சேவை செய்வேன். புதுச்சேரியை வளமானதாக மாற்ற தொடர்ந்து சேவை செய்வேன். இன்று நடைபெற்ற பந்த்தினால் பொதுமக்கள், சிறு, பெரு வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்தான் பாதிக்கப்படுவார்கள். தவிர அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்” என்றார்.

 

தொடர்ந்து நியமன எம்எல்.ஏ-க்கள் விவகாரம் குறித்துப் பேசிய அவர், “நியமன எம்எல்ஏ-க்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசே சட்டப்படி நேரடியாக நியமித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கால தாமதம் செய்ததால்தான், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தேன். இதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. மக்களுக்கு சேவை செய்ய தற்போது 3 எம்எல்ஏ-க்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளனர்” என்றார்.

படங்கள்: அ.குரூஸ்தனம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement