Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதி திருமலையில் முதியோர், ஊனமுற்றோர் தரிசன முறையில் மாற்றம்!

திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும்  முதியோர் ,மாற்று திறனாளிகளுக்கு புதிய சலுகை அளித்துள்ளது, திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

thirupathi

 

முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான  சிறப்பு தரிசன சேவையில் நேர அவகாசமும் நுழைவு அனுமதி எண்ணிக்கையும் கூடுதலாக்கியுள்ளது. அதாவது  இம்மாதம் ஜூலை மாதம்18  மற்றும் 25 ஆம் தேதிகளில் 10 மணிக்கு  ஆயிரம் பேர்  2 மணிக்கு 2 ஆயிரம் பேர் 3 மணிக்கு ஆயிரம் பேர் ஆக மொத்தம்  4 ஆயிரம் பேருக்கு நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்படும். இதேபோல் கைகுழந்தைகளை எடுத்து கொண்டு தரிசனத்திற்கு வரும் பெற்றோர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஒரு வயது குழந்தை அழைத்து வரும் பெற்றோருக்கு சுபதம் எனும்  சிறப்பு  அனுமதி வழியில்  வரும் ஜூலை 19 மற்றும் 26 தேதிகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோருக்கு காலை 9 மணியிலிருந்து 1.30 மணி வரையில் தரிசனத்திற்கான  நுழைவு அனுமதி சீட்டு வழங்க முடிவு செய்துள்ளது. இம்முறை தற்சமயம் மேற்குறிப்பிட்ட சலுகைகள்  அந்த 2 நாட்கள்  மட்டுமே அமலில் இருக்கும்.

பக்தர்கள் ஆதார் அட்டை, குழந்தைக்கான பிறப்பு சான்று ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் . இல்லாத பட்சத்தில் நிராகரிக்கப்படுவர் .
சரியான முறையில் மேற்குறிப்பிட்ட சலுகைகளை பக்தர்கள் உபயோகித்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement