Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - திருப்பூரில் மூவர் கைது!

திருப்பூர் மாவட்டம் சோளிபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு உரிய வகையில் சொகுசு காரில் சுற்றித் திரிந்த நபர்களை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து 1 கோடி ரூபாய் அளவுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.

திருச்சியைச் சேர்ந்த சுலைமான், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமசாமி மற்றும் செல்வக்குமார் ஆகிய மூவரும் நேற்று மாலையிலிருந்தே திருப்பூர் மாவட்டம் சோளிபாளையம் பகுதியில் காரில் சுற்றிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களது நடவடிக்கை மிகவும் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

சம்பவ இடத்தை நோக்கி வந்த காவல் துறையினர், சந்தேகத்துக்கு உரிய அந்த மூன்று நபர்களையும் மடக்கிப் பிடித்து விசாரணை  செய்தனர். அதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அந்த நபர்கள் தெரிவித்ததால், காவலர்களுக்கு சந்தேகம் வலுத்தது. எனவே, அவர்கள் ஒட்டிவந்த காரை முற்றிலுமாக சோதனையிட்டுப் பார்த்த காவலர்கள், அந்த காரின் பின் பக்கத்தில் 1 கோடி ரூபாய் அளவிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்கள். பின்னர் அவர்களிடமிருந்து அந்த பணம் மற்றும் சொகுசு கார் இரண்டையும் பறிமுதல் செய்த காவலர்கள்,  மூவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசாரணையை துவங்கினர். 


அதில், திருப்பூரில் உள்ள ஒரு தரகரிடம் இந்த பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுவதற்காக எங்களை கோவில்மணி என்ற நபர் புதுக்கோட்டையில் இருந்து அழைத்து வந்ததாகவும், இங்கு சோளிபாளையம் பகுதியை வந்தடைந்தவுடன், பணம் மாற்றித்தரும் தரகரை அழைத்து வருவதாக கூறிச் சென்றவர், பல மணி நேரங்கள் கடந்த பின்பும், திரும்பி வராததால், என்ன செய்வதென்று தெரியாமல் இங்கேயே சுற்றிக்கொண்டு இருந்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அதனையடுத்து, இந்த மூவரையும் அழைத்து வந்த கோவில்மணி என்ற நபரையும், பணம் மாற்றித் தருவதாகக் கூறிய தரகரையும் தேடிப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது காவல் துறை.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement