Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் தாலிக்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி – அமைச்சர்கள் பங்கேற்பு

சமூகநலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இராசாமணி தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, திருச்சி மாவட்ட அரசு தலைமை வழங்கறிஞர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இவ்விழாவில் 1086 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடியே 81 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதில் மட்டும் சாதனையாளராக விளங்கவில்லை, அந்தத் திட்டங்கள், கடைக்கோடி பாமர மக்களுக்கும் தடையில்லாமல் பலனளிக்கின்றதா என்று கண்காணிக்கும் வல்லமை கொண்டவராக இருந்தார்கள். குறிப்பாக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விலையில்லா அரிசி வழங்கும் உன்னதத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். விலையில்லா மடிக்கணினி, 16 வகையான கல்வி உபகரணங்கள், இலவச சீருடை, விலையில்லா மதிவண்டிகளை உள்ளிட்டவற்றை அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் குடிசைகள் இல்லாத கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏழைகளுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், பிரதமந்திரி வீட்டு வசதி திட்டம் ஆகியவை தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகச் செயல்பட்டு வருகிறது. அம்மாவின் அரசு திருமண உதவித்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் திருமாங்கல்யத்திற்கான தங்கத்தை எட்டு கிராமாக உயர்த்தினார்கள். இத்திட்டம் பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்க மிகச் சிறப்பாக அமைந்தது.

அதன்படி இன்று திருச்சி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் சார்பில் 2017-18ம் ஆண்டிற்கான திருமண நிதியுடன் கூடிய தாலிக்கு தங்கம், 200 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கும், 300 பட்டதாரி பயனாளிகளுக்கும் என மொத்தம் 500 பயனாளிகளுக்கு 2 கோடி திருமண நிதியுதவியும், 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், 10 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டியும் வழங்கப்பட்டது. திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, முசிறி, திருவெறும்பூர், இலால்குடி, ஆகிய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 152 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரத்து 108 மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் மானியமாக ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரமும், மாநில அரசின் மானியமாக ரூபாய் 60 ஆயிரமும் பயனாளிகளின் பங்களிப்பாக ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் என மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரம் செலவில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close