வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (09/07/2017)

கடைசி தொடர்பு:14:07 (09/07/2017)

மதுரையில் அவள் விகடன் வழங்கும் ஜாலி டே!

 அவள் விகடன் விழா 1

அவள் விகடன் வழங்கும் ஜாலிடே வாசகிகள் திருவிழா மதுரை தமுக்கம் அருகே உள்ள லெட்சுமி சுந்தரம் ஹாலில் துவங்கியது . இதில் ஏராளமான பெண்கள் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் இலவச அனுமதி சீட்டை பெற்று விழா நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர்.

விழாவினை  மகளிர் மருத்துவம் மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் கல்பனா அவர்களும் ,  ரியோ ரெசிடன்சி உரிமையாளர் முத்துலெட்சுமி அவர்களும் துவங்கி வைத்தனர் . மேலும் மருத்துவர் கல்பனா அவர்கள் பேசியதாவது.. ’இன்றைய தினத்தை அவள் விகடனுடன் ஜாலியாக கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் வணக்கம் . துன்பங்களை மறப்பது என்பது எளிதல்ல அது கடினமும் அல்ல.  மனதில் இன்பத்தை சேர்த்துக்கொண்டால் போதும் துன்பம் தானாக பறந்துவிடும். மன அழுத்தம் , சோர்வு இப்படி அனைத்தையும் நாம் மறக்க வேண்டும். அதற்கு நமக்கு கொண்டாட்டம் தேவைப்படுகிறது .  அதற்கான விழாவாகத்தான் நான் இந்த அவள் விகடன் ஜாலி டே விழாவை பார்கிறேன் . நீங்கள் அனைவரும் எங்கெங்கோ இருந்து வந்து ஒரே இடத்தில் இன்று சங்கமித்துள்ளீர்கள் கண்டிப்பாக இந்த விழாவை கொண்டாடுங்கள்’ என்றார்.  மேலும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க பல டிப்ஸ்களை அள்ளித்தெளித்தார் . அதனை தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்சியோடு விழா ஆரம்பம் ஆனது .

 அவள் விகடன் விழா  2

ஞாயிற்றுகிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது . விழாவின் நிகழ்ச்சி தொகுப்பினை சின்னத்திரை நடிகர்கள் அரவிந்த் மற்றும் சித்ரா அவர்கள் தொகுத்தனர். விழாவில் பங்கேற்கும் வெற்றியாளர்களுக்கு,பிரிட்ஜ் , வாசிங் மிஷன் , கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக தெரிவித்தனர் . விழாவில் பெண்கள் கைதட்டலும் விசில் சத்தமும் அரங்கே அதிர்ந்தது. பெண்களுக்கான விழா என்பதால், பெண்கள் உற்காகமாக கொண்டாடி வருகின்றனர் .