சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி! | Modi back to India

வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (09/07/2017)

கடைசி தொடர்பு:13:24 (09/07/2017)

சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

ஸ்ரேல், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இந்தியா வந்தடைந்தார்.

இந்தியா-இஸ்ரேல் தூதரக உறவுமுறை 25 ஆண்டுகள் நிறைவானதையொட்டி மூன்று நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றார் பிரதமர் மோடி. அங்கு அவருக்கு சிறப்பு மரியாதைகள் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு நடந்த சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆலோசனைகளில் கலந்துக்கொண்டார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும், இந்திய பிரதமர் மோடியும் இணைந்து இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டனர். மேலும் இருநாடுகளுக்கும் சகோதரத்துவம் அதிகரிக்க டெல்லி-மும்பை-டெல் அவிவ் இடையே விமான போக்குவரத்து சேவை தொடங்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அங்கிருந்தபடி ஜி-20 மாநாட்டில் கலந்துக்கொல்வதற்க்காக ஜெர்மனி புறப்பட்டு சென்றார். அங்கு ஹம்பர்க் விமான நிலையத்தில் மோடிக்கு சிறப்பு வரவேற்ப்புகள் அளிக்கப்பட்டன.இந்து பல நாட்டு தலைவர்களையும் பிரதமர்  மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் ஜி-20 மாநாடு நிறைவடைந்ததையொட்டி நேற்று இரவு ஜெர்மனியில் இருந்து விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு திரும்பினார். 

இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய இருநாடுகளையும் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடியை டெல்லி விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் மற்றும் அரசு அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.