Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”தகனம் செய்யப்பட்ட உடல்களின் விவரங்களே இல்லை” - சுடுகாட்டு ஆய்வில் கிரண் பேடி

கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் பொதுமக்களின் புகார் அடிப்படையில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ”கருவடிக்குப்பம் சுடுகாட்டில் மின் தகன இயந்திரம் இயங்கவில்லை என்றும் உடலை அடக்கம் செய்ய அதிக அளவில் கட்டணம் வசூலிக்கிறார்கள்” என்றும் ஆளுநனர் கிரண்பேடிக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதனடிப்படையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கருவடிக்குப்பம் சென்ற அவர் சுடுகாட்டில்  ஆய்வு செய்தார். அப்போது கடந்த ஆறு மாத காலமாக மின் மற்றும் கேஸ் மூலம் உடல் தகனம் செய்யும் இயந்திரங்கள் பழுதடைந்து இருப்பதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அடக்கம் செய்ய வரும் உடல்களின் பதிவேடுகள், உடல்களை எரியூட்டும் இடம் மற்றும் புதைக்கும் இடங்களையும் ஆய்வு செய்தர்.

 

அதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “உடல்களை அடக்கம் செய்யும்போது முறையான பதிவுகள் இல்லை என்றால் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் கணினி மயமாக்கப்பட்டு  உடல்களை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். பொதுமக்களிடம் இருந்து நிறைய புகார்கள் எனக்கு நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில புகார்களை சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சில முக்கிய புகார்களை நானே நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். அரசு அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்க முன்வரவேண்டும். பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவில்லை என்றால் பிரச்சனைகளுக்கு அவர்களே காரணமாகிவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.

 

இதுகுறித்து வாட்ஸ்-அப் மூலம் கிரண்பேடி அனுப்பிய செய்திக் குறிப்பில், ”கருவடிக்குப்பம் சுடுகாட்டைப் பற்றி பொதுமக்களிடம் வந்த புகார்கள் அனைத்தும் உண்மையாகவே இருக்கின்றது. மின் தகன இயந்திரங்கள் பல மாதங்களாக இயங்கவில்லை. ஆண்டுப் பராமரிப்பு நடந்ததற்கான எந்தவிதமான ஆதாரங்களும் அங்கு இல்லை. அங்கிருந்த துணைப் பொறியாளரால் அதற்கு சரியான காரணங்களை சொல்ல முடியவில்லை. நகராட்சியில் முக்கிய பங்கை வகிக்கும் இந்த இடத்தில் எந்த ஆவணங்களும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. தகனம் செய்ய செய்ய எத்தனை உடல்கள் வந்தது, அவைகள் மூலம் வந்த வருவாய் எவ்வளவு போன்ற எந்தத் தகவலும் கோப்புகளும் அங்கு இல்லை. அந்த இடத்தில் பொறுப்பாளரிடம் அது தொடர்பான அனைத்து கோப்புகளையும் எடுத்துக் கொண்டு ராஜ்நிவாசிக்கு வர சொல்லி இருக்கிறேன். இந்த மாதிரியான மக்கள் பிரச்சனைகளை உடனே ஆய்வு செய்து தீர்த்து வைப்பதால் ராஜ்நிவாஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கின்றது. இப்படியான ஆய்வுகளை அடிக்கடி செய்வதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close