Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்லூரி மாணவி வேடத்தில் வந்து வடிவேல் பாலாஜியை கலாய்த்த பாட்டிகள்!

அவள் விகடன் வழங்கும் ஜாலிடே வாசகிகள் திருவிழா மதுரை தமுக்கம் அருகே உள்ள லெட்சுமி சுந்தரம் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.  பெண்களுக்கான விழா என்பதால், பெண்கள் உற்காகமாக கொண்டாடி வருகின்றனர்.

மதுரையில் வடிவேலு பாலாஜியுடன் பாட்டிகள்

உணவு இடைவெளிக்கு பின் மீண்டும் மதுரை அவள் விகடன் ஜாலிடே பங்சன் நகைச்சுவையோடு தொடங்கியது. வடிவேல் பாலாஜி அவரது ஃபேவரைட் ஜிகு ஜிகு  துபாய் சட்டையோடு மேடையில் களம் இறங்கினார். சின்னஞ்சிறு குழந்தைகளின் மிமிக்கிரி, குத்து பாடல்களையும் கேட்டு அசந்து போன வடிவேல் பாலாஜிக்கு அடுத்ததாக கல்லூரி மாணவிகள் வேடத்தில் வந்த பாட்டிகள் லந்து கொடுத்தனர். கருப்பு கண்ணாடியும் ஜீன்ஸ் உடன் வந்த பாட்டிகள் வடிவேல் பாலாஜியுடன் தல அஜித் பாட்டுக்கு கம்பெனி கொடுத்து டான்ஸ் ஆடினர். வடிவேல் பாலாஜி கேட்ட கேள்விகளுக்கு மதுரை தோரணையில் நக்கலாக பதில் சொல்லி அவரை கலங்கடிக்க வைத்தனர் . இதனால் விழா அரங்கே நகைச்சுவையில் அதிர்ந்தது. சம்மந்தி உறவுகளான அந்த பாட்டிகளிடம் பேட்டி கேட்டோம்.

'என் பெயர் மீனாட்சி, 58 வயது, நான் மதுரை கே.புதூர் பகுதியில் இருந்து வருகிறேன். அவள் விகடன் ஆரம்பித்ததில் இருந்து பரம ரசிகை. எனக்கு கிச்சன் சந்தேகம் முதல் என் பிள்களைக்கு மருத்துவ குறிப்பு வரை என புது புது விஷயங்கள் என்று அள்ளி வழங்குவது அவள் விகடன்தான். என் மகள்தான் எனக்கு இந்த டிரஸ்சை கொடுத்தால். நான் எல்லா ஜாலிடே நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வேன் இந்த முறை புது கெட்டப்போட என் சம்மந்தியம்மாவோட சேர்ந்து கலந்து கொண்டது செம ஜாலியாக இருந்தது. என்றும் இல்லாத மகிழ்ச்சி எனக்கு இன்று கிடைத்துள்ளது' என்றார்.

மதுரையில் வடிவேலு பாலாஜியுடன் பாட்டிகள்

இன்னொரு பாட்டி, 'என் பேரு குருவம்மா. நான் தூத்துக்குடியில் இருந்து வருகிறேன். 'மதுரைல தான் பொண்னு எடுத்துருக்கோம்.  விடுமுறைய எஞ்சாய் பண்ண என் மருமக வீட்டுக்கு வந்தேன். என் சம்மந்தியம்மா இந்த நிகழ்ச்சிக்கு கூட்டிவந்தாக. சும்மா இல்ல ஜீன்ஸ் டிரஸ் போட சொல்லி. ஆனா இங்க அரங்கு முழுவதும் பெண்கள் நிறைந்து இருக்கவும் எனக்கு எந்த கூச்சமும் இல்ல என் மகன் மாதிரி இருக்க வடிவேல் பாலாஜி யோட இன்னைக்கு டான்ஸ் ஆடிட்டேன். நான் இது நாள் வரைக்கும் டான்ஸ் ஆடியதே இல்ல. அந்த குறை இந்த ஜாலிடே நிகழ்ச்சி மூலம் நிறைவேறிவிட்டது. இனி வருடா வருடம் ஜாலி டே பங்சன்ல கலந்துகொள்வேன்' என்றார் .

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement