வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (09/07/2017)

கடைசி தொடர்பு:12:59 (10/07/2017)

எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா: சிறப்பிக்க தமிழக முதல்வர் திருச்சி வருகை!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்குபெற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்துக்கு வருகை தந்தார்.

திருச்சி விழாவில் எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என சிறப்பு நிகழ்ச்சிகள் பல ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கபடிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார்.

திருச்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் முதல்வர். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அங்கு த.மா.கா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையிலான விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து, ஆடிப்பெருக்குக்கு காவிரியில் தண்ணீர் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க