Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசாம் கனமழையில் 4 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மழை

டகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அசாமின் லக்கிமிப்பூர், கோலாகாட், கரீம்கஞ்ச் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை அசாம் மாநிலத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்குப் போதுமான எல்லா உதவிகளும் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் சர்பானந்தா சோனாவால் ஆலோசனை நடத்தினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க 128 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். காசிரங்கா தேசிய உயிரினப் பூங்காவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மாநில அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, குடிநீர் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருகின்றன. 

சுமார் 4 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close