நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டுப் பணியாளர் மர்ம மரணம்

நடிகர் சிவகார்த்திகேயனின் திருச்சி வீட்டில் தோட்ட வேலை செய்து வந்த நபர், திருச்சி கல்குவாரியில் சடலமாகக் கிடந்தார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

 திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில், புதுக்கோட்டை ஆவூரை அடுத்த சாத்தனூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தோட்ட வேலை செய்து வந்தார். கடந்த 3 நாள்களாக ஆறுமுகம் பணிக்கு வரவில்லை. 


இந்நிலையில், இன்று காலை திருச்சி காஜாமலைப்  பகுதியிலுள்ள கல்குவாரி ஒன்றில் உள்ள நீரில் அடையாளம் தெரியாத ஒருவர் சடலமாக  மிதப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த  போலீஸார், தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர். 

விசாரணையில், குவாரியில் சடலமாகக் கிடந்தவர், நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆறுமுகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்செயலாக கல்குவாரி நீரில் தவறி விழுந்து இறந்தாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டுத் தொழிலாளி மரணமான செய்திக்கேட்டு, அப்பகுதிமக்கள் சிவகார்த்திகேயன் வீட்டு முன் கூடியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!