வெளியிடப்பட்ட நேரம்: 02:31 (10/07/2017)

கடைசி தொடர்பு:18:36 (26/02/2018)

தாய்மை அடைந்ததைக் கண்டுகொள்ள உதவும் அறிகுறிகள்

தாயாகும் பெண்ணே முழுமை அடைகிறாள் என்று சொல்வார்கள். முதன்முதலாக, தாய்மை அடைந்திருக்கிறோம் என்று உணரும் தருணம்தான் ஒரு பெண்ணின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம் என்பார்கள். திருமணமாகி சிலநாள்கள் ஆகிவிட்டன. மாதவிடாய் தள்ளிப்போய் உள்ளது. இதை மட்டுமே அறிகுறியாகக்கொண்டு தாய்மை அடைந்தேன் என எண்ணிக்கொள்ள முடியுமா? மருத்துவர் உறுதிப்படுத்தும் முன்பு, இதோ இந்த அறிகுறிகளைக் கண்டு ஓரளவு உணர்ந்துகொள்ளலாம்.

தாய்மை

1. கருவிலிருக்கும் உங்கள் பாப்பாவுக்கு ஆக்சிஜன் தேவை என்பதால், உங்களுக்கு மூச்சு வாங்கும். 2. மார்பகங்கள் தளர்ந்து போகலாம்.   3. உடலில் சுரக்கும் வேகமான ஹார்மோன்களால் சோர்ந்து போவீர்கள். 4. குமட்டல் உண்டாகும். 5.சிறுநீர்ப்பைக்கு அதிகப் பணிச்சுமை உண்டாவதால், அடிக்கடி சிறுநீர் போகும். 6. ஹார்மோன்களின் விளைவால் அடிக்கடி தலைவலிக்கும். 7. தசைநார்கள் தளர்வதால், பின் முதுகு வலி உண்டாகும். 8. கருப்பை நீட்சி அடைவதால், அடிவயிற்றில் தசைப்பிடிப்பு. 9.அதீத பசி, தாகம், அஜீரணம் போன்றவையும் தோன்றும்.

10. தூக்கமின்மையால் மலச்சிக்கல் உருவாகலாம். 11. பதற்றம், சந்தோஷம், பயம் என மாறி மாறி உருவாதல். 12. உடலின் மறைவான பகுதிகள் சூடாகும். 13. வாசனையை அதிகமாக உணர்வீர்கள். 14.வயிற்றின் நடுக்கோடு கருமையாகும். 15. மறைவான பாகங்கள் மிருதுவாகும். 16. இறுதியாக, வீட்டிலேயே மருத்துவச் சோதனைகள்மூலம் நீங்கள் கருவுற்றதைக் கண்டுபிடிக்கவும் செய்யலாம்.