Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்றும் இளமையாக இருக்க ஆண்கள் இதைச் செய்யலாம்!

ஓயாத உழைப்பு, உடல்நலத்தில் அக்கறை இல்லாததன் விளைவால், ஆண்கள் சீக்கிரமே முதுமையடைகிறார்கள். சிலர் மட்டும்,  மார்க்கண்டேயனைப்போல என்றும் இளமையாக இருப்பார்கள். அதன் ரகசியம் என்னவென்றால், உடல்வாகு அப்படி என்று சிரிப்பார்கள். ஆழ்ந்து கவனித்ததில், இவையெல்லாம் இருக்கலாம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைப் பின்பற்றி, நீங்களும் என்றும் இளமையாக இருக்கலாமே?

இளமை

1.தினமும் 10 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர்  குடியுங்கள். 2.இரண்டு வேளை குளியல் 4 வேளை முகம் கழுவ வேண்டும். 3. பசலைக் கீரை, பீன்ஸ் சேருங்கள் முகச்சுருக்கங்கள் வராது. 4.மாதுளை, திராட்சை ஜூஸ் குடியுங்கள். 5.பால், பயத்தம்பரும்புகொண்டு முகம் கழுவுங்கள். 6.உடற்பயிற்சி, உடலில் தளர்வை உண்டாக்காது. 7.மிகச் சரியான அளவு உடைகளை அணியுங்கள். 8.வெயிலில் சுத்த வேண்டாம். அப்படிச் சுற்றினால், சன் ஸ்க்ரீன் லோஷன் போடவும். 9.அளவான உணவை இடைவெளி விட்டு உண்ணவும்.10.வெது வெதுப்பான நீரில் ஷேவ் செய்யவும். 11.உணவில் உள்ள கருவேப்பிலையை மென்று தின்னவும்.

12.அதிக நேரம் பல் துலக்கி பல்லைக் கெடுக்க வேண்டாம். 13. புகைப்பழக்கம் முகச்சுருக்கம் தரும். 14.குடிப்பழக்கம் வேண்டவே வேண்டாம். 15.அதிக நேரம் கண்விழிக்க வேண்டாம். 16.தலையில் அழுக்கில்லாமல் இருந்தாலே முடி உதிர்வது நிற்கும். 17.மசாஜ் செய்துகொள்ளுங்கள் தசைகள் பொலிவாகும். 18.மூன்று மாதம் ஒருமுறை சரும மருத்துவரை ஆலோசியுங்கள். 19.எண்ணெய் உணவுகள் வேண்டாம். 20.முகத்தைக் காய விட வேண்டாம். 21.நல்ல ஓய்வும் உறக்கமும் தேவை. 22.மீசை, தாடியை அழகாக வைத்துக்கொள்ளுங்கள். 23.சோப்பு, ஷாம்பு, க்ரீம்களில் கவனம் செலுத்துங்கள், இயற்கை மூலிகையாகத் தேர்வுசெய்யுங்கள். 24.அடிக்கடி வாய்விட்டுச் சிரியுங்கள்.


மேற்சொன்னவற்றைக் கடைப்பிடித்தால், கட்டாயம் நீங்கள் ஐம்பதிலும் ஜொலிஜொலிக்கலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close