இந்த ஆண்டின் மிகப் பெரிய மழை... குளிர்ந்தது சென்னை!

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து, கடுமையான வறட்சி ஏற்பட்டதால் கோடை வாட்டிவதைத்தது. இதையடுத்து, தென்மேற்குப் பருவமழை தொடங்கியது முதல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்தது. ஆனால், மழை தொடர்ந்து பெய்யவில்லை. குறிப்பாக, கனமழை என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

Rain Chennai


இந்நிலையில், நேற்று இரவு திடீரென சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. சாதாரண மழை என்று நினைத்தபோது, மழை தொடர்ந்து பெய்தது. ஒரு மணி நேரம்... இரண்டு மணி நேரம் ஆகியும் மழை விடவில்லை. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

Chennai: Biggest rain of the year


மழை தொடர்ந்தும் விட்டு விட்டும் பெய்கிறது. இந்நிலையில், 'சென்னையில் இந்த ஆண்டு பெய்த மழையிலேயே இதுதான் பெரிய மழை' என்று வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் 72 மி.மீ மழை பெய்துள்ளது. இதனிடையே, இன்று இரவு முழுவதுமே சென்னையில் நல்ல மழை பெய்யும் என அவர் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!