நிலக்கரி ஊழல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நிலக்கரி ஊழல் ன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நிலக்கரி ஊழல் வழக்கு. நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஜிண்டால் நிலக்கரிச் சுரங்க விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சி.பி.ஐ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது.
இந்த ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேருக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை, நீதிமன்றம் கவனத்தில்கொண்டது. ஜிண்டால் ஸ்டீல் பவர் லிமிடட் நிறுவனத்தின் ஆலோசகர் ஆனந்த கோயல், க்ரீன் இன்பரா துணைத் தலைவர் சித்தார்த் மத்ரா, நிகார் ஸ்டாக்ஸ் லிமிடெட் இயக்குநர் பி.எஸ்.என். சூர்யநாராயணன், மும்பையைச் சேர்ந்த கே.ஈ. சர்வதேச நிதித் தலைமை அலுவலர் ராஜிவ் அகர்வால், மும்பையைச் சேர்ந்த எஸ்ஸார் பவர் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் சுஷில் குமார் ஆகியோரின் பெயர்கள், சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று (10-7-2017), உச்ச நீதிமன்றத்தில் இந்த ஊழல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

<> <p>

Do you like the story?

Please Appreciate the Author by clapping!