Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சவ ஊர்வலத்தில் கலவரம்... சேலத்தில் பதற்றம்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கலைச்செல்வனின் இறுதி ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது.

கலவரம்

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். வழக்கறிஞரான இவர், சிறு வயதில் சொந்த ஊரான கன்னங்குறிச்சியில் இருந்தார். பிறகு, மனைவியின் ஊரான  நாமக்கல்லுக்கு குடிபெயர்ந்துவிட்டார். வயது முதிர்ச்சி காரணமாக இவர் முன்தினம் இறந்துவிட்டார். இவரை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவருடைய மகன்களான அன்பு, ஜெகதீசன், கன்னங்குறிச்சியில் உள்ள தம் சொந்த வீட்டுக்கு அப்பாவின் உடலை எடுத்துவந்து இறுதிச் சடங்குகள் செய்துவந்தார்கள். இந்நிலையில், நேற்று மதியம் நாமக்கல்லிலிருந்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள், மூன்று மினி பஸ்களிலும், இரண்டு கார்களிலும் கலைச்செல்வனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக சேலம் கன்னங்குறிச்சிக்கு வந்தார்கள்.

கன்னங்குறிச்சி பஸ் நிலையத்தில், மினி பஸ்களையும் கார்களையும்  நிறுத்திவிட்டு, மாலை, துணிகளோடு ஊர்வலமாக கலைச்செல்வன் உடல் வைத்திருக்கும் வீட்டை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தபோது, செல்வம் மளிகைக் கடை அருகே பட்டாசு கொளுத்தி வைக்க முயன்றனர். செல்வம் மளிகை ஸ்டோரின் உரிமையாளர் செல்வமும், அவரின் மகன்களான முருகன், கணேசனும் இந்த இடத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.

கலவரம் 2

'கடைக்குள் வராமல் பட்டாசு வெடிக்கிறோம்' என்று கூறிவிட்டு அவர்கள் பட்டாசு வெடித்தனர். இதனால், கலைச்செல்வத்தின் உறவினர்களுக்கும் செல்வம் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் முற்றி, கலைச்செல்வத்தின் உறவினர்கள் செல்வத்தின் கடைக்குள் புகுந்து செல்வம் மற்றும் அவருடைய மகன்களான முருகன், கணேசனை தாக்கி இருக்கிறார்கள். செல்வம், தி.மு.க-வைச் சேர்ந்தவர். செல்வம் குடும்பம் தாக்கப்பட்ட சம்பவம் ஊர் முழுவதும் பரவ, வெளியூரிலிருந்து வந்து உள்ளூர்க் காரரைத் தாக்கிவிட்டார்கள் என்ற கோபத்தில், கலைச்செல்வன் சவ ஊர்வலத்துக்கு வந்தவர்களை நோக்கி, பதிலுக்கு கற்களால் தாக்கியதோடு, அவர்கள் வந்த பஸ், கார்களின் கண்ணாடிகளையும் உடைத்து எரிந்தார்கள். இதனால், ஊரே ரணகளமானது. உடனே காவல்துறையினர் கலைச்செல்வன் இறுதி ஊர்வலத்துக்கு வந்தவர்கள் 15 பேரை கைதுசெய்தனர். மேலும், கலைச்செல்வத்தின் உடலை ஆம்புலன்ஸ்மூலம்  எடுத்துச்சென்று, அடக்கம் செய்தார்கள்.

கலவரம் 3

இதுபற்றி கன்னங்குறிச்சியைச் சேர்ந்த குபேந்திரன், ''இந்தக் கலவரத்தில் எந்த ஒரு முன்விரோதமும் இல்லை. அவர்கள் பட்டாசு வெடித்த இடம், ரொம்ப ஆபத்தான இடம். சுற்றிலும் வீடுகள் இருக்கின்றன. அவர்கள் வெடித்த இடத்தில் செல்வம் கடை வைத்திருக்கிறார். அதைக் கேட்டதற்கு, வெளியூர்களிலிருந்து வந்தவர்கள், வீட்டுக்குள் புகுந்து அடித்திருக்கிறார்கள். இதுதான் சம்பவம். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close