நெடுவாசல், கதிராமங்கலம் காக்க களமிறங்கிய திருச்செங்கோடு மாணவர்கள்!

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தைக் காக்க, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நெடுவாசல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, நெடுவாசல் மக்கள் இன்று 90-வது நாளாகப் போராடிவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓ.என்.ஜி.சி-யைக் கண்டித்து, கதிராமங்கலம் மக்களும் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். செழிப்பான வேளாண்மை நடக்கும் இந்த இரு ஊர்களும், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க தீவிரமாகப் போராடிவருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகிவருகிறது.

இந்நிலையில்,நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தைக் காக்க, திருச்செங்கோடு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அங்குள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த இவர்கள், தற்போது வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், கதிராமங்கலத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பிவருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!