'உடனடியாக இதை சரிசெய்யுங்கள்'- கூகுள் சுந்தர் பிச்சைக்கு முக்கிய கோரிக்கை

கூகுள் நிறுவனத்துக்கு, காங்கிரஸ் எம்பி சஷி தரூர் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். கூகுள் சர்ச்சில், 'சௌத் இந்தியன் மசாலா' என்று தேடும்போது, பெண்களில் அரைநிர்வாண புகைப்படங்கள் தோன்றுவது குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, அதைச் சரிசெய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியன்

கூகுள், உலகின் முன்னணி தேடுதல் பொறியாக உள்ளது. இதில், 'நார்த் இந்தியன் மசாலா' என்று தேடினால், உணவுக்குப் பயன்படுத்தப்படும் மசாலா பொருள்கள் தோன்றுகின்றன. ஆனால், 'சௌத் இந்தியன் மசாலா' என்று தேடும்போது, மசாலா பொருள்களுக்குப் பதிலாக இந்தியப் பெண்களின் அரைநிர்வாணப் படங்களே திரையில் தோன்றுகின்றன. 

இதை, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி சஷி தரூர் வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இது தென்னிந்தியப் பெண்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றும், இதை கூகுள் நிறுவனம் உடனடியாகக் கவனத்தில் எடுத்து சரிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ட்விட்டரில் கூகுள் மற்றும் அதன் சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சைக்கும் இதை டேக் செய்துள்ளார். 

ஆனால், கூகுள் தேடுதலைப் பொறுத்தவரை தேடுபவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை வைத்தே ரிசல்ட்டுகளைக் கொடுக்கும். அனைத்துமே, அல்காரிதம் மற்றும் டேட்டாக்களால் முடிவுசெய்யப்படுவது. சஷி தரூரின் கேள்விகளுக்கு கூகுள் மற்றும் சுந்தர் பிச்சை  தரப்பிலிருந்து இன்னும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!